வரும் 24 ஆம் திகதிக்குள் சீமான் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் என்ன நடக்கும் தெரியுமா..? என்று நடிகை விஜயலட்சுமி வீடியோ வெளியிட்டுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறிவிட்டு ஏமாற்றியதாக சென்னை வளசரவாக்கம் பொலிஸ் நிலையத்தி விஜயலக்ஷ்மி ஒருவர்புகார் செய்தார்.அதன் அடிப்படையில், சீமான் மீது 2011-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி கடந்த 2023-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இதனை எதிர்த்து சீமான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த ஜூலை மாதம் 21 அன்று மீண்டும் விசாரித்தது. அப்போது, சீமான் தரப்பில் வழக்கு விசாரணையை தள்ளிவைக்கக்கோரி ஏற்கனவே கடிதம் வழங்கியிருந்த நிலையில், விஜயலட்சுமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுக்கு இடமில்லை என்று குறிப்பிட்டார்.
இந்த வழக்கு கடந்த 12 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகை விஜயலட்சிமியிடம் சீமான் வரும் 24-ஆம் திகதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கோர தவறினால், சீமானை கைது செய்வதற்கான தடை ரத்து செய்யப்படும் என்றும் வழக்கை எதிர்கொள்ள சீமான் தயாராக இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான், நடிகையிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உச்சநீதிமன்றம் எதுவும் கூறவில்லை; அந்த தீர்ப்பை காட்டுமாறும் நிருபர்களிடம் திருப்பி கேள்வி கேட்டார். இதையடுத்து சீமானை விமர்சித்து நடிகை விஜயலட்சுமி பரபரப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
”உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி என்ன சொல்கிறார்கள் என்பதை வீடியோ காலில் பார்த்துக்கொண்டு இருந்தேன். சீமான் தரப்பு வழக்கறிஞர் சொன்னாங்க. விஜயலட்சுமி மீதான வழக்கை வாபஸ் வாங்கிக்கொள்கிறோம். இந்த வழக்கை முடித்துக்கொடுங்க என்று கேட்டாங்க. ஏன் இரண்டு பேரும் சமரசமாக போகவில்லை என்று நீதிபதிகள் கேட்டார்கள். மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் அப்போது சீமான் தரப்பு வழக்கறிஞர் சொல்ல முடியாது அல்லவா…?
சமரசம் ஆகிறோம் என்றுதான் நான் ஆர்டர் வாங்கினேன். வெளியில் சீமான் சமரசம் ஆக மாட்டோம் என்று சொன்னதை சொல்ல முடியாது அல்லவா…? அவர் தரப்பை அவர் விட்டுக்கொடுக்க கூடாது என்பதால் பழியை தூக்கி டக்குன்னு விஜயலட்சுமி ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள் அப்படின்னு என் மேல பழி போட்டாங்க..
அப்போது நீதிபதி என்ன சொன்னார் என்றால், இரண்டு பேரும் குழந்தைகள் இல்லை. இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொண்டே இருக்க வேண்டாம். இரண்டு பேரையும், ஒரு ஒப்பந்தத்தில் போக சொல்லுங்க. விஜயலட்சுமிக்கு வரும் காலத்தில் தொந்தரவு கொடுக்க மாட்டோம் என்று 24 ஆம் திகதி ஒரு மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்தால் இதை முடிப்பதற்கு என்று நீதிபதி சொன்னார்கள். ஆதாரத்தை காட்டுங்கன்னு சொல்றார் இதை நானே பார்த்தேன்.

இதை சீமானிடம் மீடியாக்கள் கேட்ட போது, யார் சொன்னாங்க. எந்த நீதிபதி சொன்னாங்க. ஆதாரத்தை காட்டுங்க என்று ஒரே நொடியில் மீடியாவை முட்டாளாக்கிவிட்டு போகிறார். இப்போ அந்த மீடியா, கோர்ட்டு வீடியோவை காட்டிவிட்டு கேட்டு இருக்க வேண்டும். மக்களுக்கு எது உண்மை, எது பொய் என்று குழம்பிக்கொண்டே இருக்கிறது.
நீதிபதி சொல்லியதையே யார் சொன்னாங்க. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை. என்று போகிறார் என்றால் நான் தான் எடுத்து சொல்ல வேண்டியிருக்கிறது. நான் என்ன பண்ணிக்கொண்டு இருக்கிறேன் என்றால் உச்சநீதிமன்றம் சொல்வதை பின்பற்றுவேன் என்று சொன்னேன். சீமான் தான் இதை முடிக்க வேண்டும். சீமானும் சமாதானமாக முடித்தால்தான் அது முடியும். இல்லையென்றால் மீண்டும் சண்டை இருக்க போகிறது.
24 ஆம் திகதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் அதேதான் நடக்க போகிறது. பந்து தற்போது சீமான் இடத்தில் உள்ளது. சீமான் தான் இந்த அசிங்கத்தை முடிக்க வேண்டும் என்று நினைக்கனும். சண்டை போட்டுக்கிட்டு இருப்பேன் என்றால் இது முடிய போவது இல்லை. மக்கள் குழம்ப வேண்டாம் என்பதற்காக நான் சொல்வது என்னவென்றால், 24 ஆம் திகதிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. கேட்கவில்லை என்றால் மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வந்து மீண்டும் அந்த கலாட்டாதான் நடக்க போகிறது. நான் உண்மையைத் தான் சொல்லியிருக்கிறேன்” என்று நடிகை விஜயலட்சுமி பரப்பரப்பாக கூறியுள்ளார்.


