கரூர் சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை மாமல்லப்புரத்திலுள்ள விடுதியில் விஜய் தனித்தனியாக சந்தித்து வருகிறார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மருத்துவம் மற்றும் கல்விச் செலவை விஜய் ஏற்றுக்கொள்வதாக கூறியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பத்தினரை த.வெ.க வின் முக்கிய நிர்வாகிகள் நேற்றே மாமல்லபுரத்துக்கு அழைத்து வந்துவிட்டனர்.
தனியார் விடுதியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை சந்திக்க காலை 8:30 மணியளவில் விஜய் அந்த விடுதிக்கு வந்து சேர்ந்தார். இன்று காலை 9 மணியிலிருந்து அந்த குடும்பங்களை சந்தித்து உரையாட ஆரம்பித்திருக்கிறார்.
ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் 15-20 நிமிடங்கள் ஒதுக்கி அவர்களுக்கு ஆறுதல் சொல்லி, அந்தக் குடும்பங்களை குறித்த முழு விவரங்களையும் கேட்டு தெரிந்துகொண்டிருக்கிறார்.
உயிரிழந்தோரின் குடும்பங்களை விஜய் தத்தெடுக்கப் போவதாக முன்னரே அக்கட்சியின் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உயிரிழந்த குடும்பங்களின் மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும் ‘உங்க குடும்பத்துக்கு நான் பொறுப்பு!’ என விஜய் உறுதியளித்திருப்பதாகவும் கதெரிவிக்கப்படுகின்றது.
சில குடும்பங்களின் நிலையையும் அவர்களின் துக்கத்தையும் கேட்டு விஜய்யும் உடைந்து போய் கண்ணீர் சிந்தியதாக நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.



