எதிர்வரும் 2026 ஏப்ரலில் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்காக, அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுப்பட்டு வருகின்றன. அந்தவகையில், தமிழக வெற்றிக்கழகம் வாரம்தோறும் சனிக்கிழமைகளில், பிரசாரம் செய்ய அக்கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, இன்று திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 13-ஆம் தேதி திருச்சி, பெரம்பலுார் மாவட்டங்களில், அவர் பிரசாரம் செய்தவகையில், இன்று (செப்டம்பர் -20) நாகையில் தேர்தல் பிரசாரம் செய்த விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் மக்கள் மத்தியில் பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது:
‘மின் தடை செய்தும், ஸ்பீக்கர் வயரை துண்டித்தும், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் பிரசாரத்துக்கு திமுக இடையூறு செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இப்பொழுது நான் எந்த மண்ணில் நின்று கொண்டு இருக்கிறேன் தெரியுமா? நாகூர் ஆண்டவர் அன்போடு, மாரியம்மன், வேளாங்கண்ணி ஆசியோடு எனது மனதிற்கு ரொம்ப நெருக்கமான நாகப்பட்டினம் மண்ணில் இருந்து பேசுகிறேன்.
உங்கள் அனைவருக்கும் என்றைக்கும் ஒரு மீனவ நண்பனாக இருக்கிற இந்த விஜய்யோட அன்பு வணக்கங்கள். இந்த கப்பல் இருந்து வந்து இருக்கும் பொருட்களை எல்லாம் விற்பனை செய்வதற்கு அந்த காலத்தில் அந்தி கடைகள் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். உழைக்கிற மக்கள் இருக்கும் இடம் தான் நாகப்பட்டினம்.
மத வேறுபாடுகள் இல்லாத, மதசார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் உங்களுக்கு மீண்டும் வணக்கங்கள். தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் 02-ஆம் இடத்தில் இருப்பது நாகப்பட்டினம் ஹார்பர் தான். ஆனால், அங்கு நவீன வசதிகள் கூடிய மீன்கள் பதப்படுத்தும் வசதி இல்லை. ரொம்ப அதிகமாக குடிசைப்பகுதிகள் இருக்கும் இடம் தான் நாகப்பட்டினம்.
இலங்கை கடற்படையால் நமது மீனவர்கள் தாக்கப்படுவதையும் மதுரை மாநாட்டில் பேசி இருந்தேன். அது தவறா.? மீனவர்களுக்கு குரல் கொடுப்பது நமது கடமை. 14 ஆண்டுகளுக்கு முன் நாகப்பட்டினத்தில் பொதுக்கூட்டம் நடத்தினேன்.

இந்த விஜய் களத்திற்கு வருவது ஒன்று புதுசு இல்லை கண்ணா, முன்னாடி விஜய் மக்கள் இயக்கம் என்று வந்து நிற்போம். இப்பொழுது தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் இயக்கமாக வந்து நிற்கிறோம். அவ்வளவு தான் வித்தியாசம். இது புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.
மீனவர்களுக்காக குரல் கொடுக்கிற இதே சமயத்துல, நம்ம தொப்புள் கோடி உறவுகளான ஈழ தழிழர்கள் அவங்க இலங்கையில இருந்தாலும், உலகத்துல எந்த மூலையில இருந்தாலும், தாய் பாசம் காட்டின தலைவனை இழந்து தவிக்கிற அவங்களுக்காகவும் குரல் கொடுக்கிறதும், அவங்களுக்காக நிக்கிறதும் நமது கடமை இல்லையா..?
மீனவர்கள் உயிர் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு ஈழத் தமிழர்களின் கனவுகளும், அவர்களுடைய வாழ்க்கையும் நமக்கு முக்கியம். நம்ம மீனவர்கள் கஷ்டத்தை பார்த்து ஒரு கடிதம் எழுதிவிட்டு கப்சிப் என்று போவதற்கு நாம் கபட நாடக திமுக அரசு கிடையாது.

மற்ற மீனவர்கள்னா இந்திய மீனவர்கள், நம்ம மீனவர்கள்னா தமிழக மீனவர்கள்..? இப்படி பிரிச்சு பார்த்து பேசுறதுக்கு நாம ஒன்னும் பாசிச பாஜக அரசு கெடையாது. நிரந்தரமான தீர்வு நிரந்தரமான பிரிச்சினைகளை தீர்ப்பதுதான் நமது முக்கியமான வேலை.
நாகப்பட்டினத்தில் இருக்கிற மண்வளத்தை பாதிக்கின்ற இறால் பண்ணைகளை முறைப்படுத்தனும். அப்போதுதான் மீனவர்களின் வாழ்வாதாரமும், விஸாஸாயிலுந் வாழ்வாதாரமும் பகிக்கமா இருக்கும். கடலோர கிராமங்களை மீன் அரிப்பில் இருந்து பாதுகாக்கிற அலையாத்தி காடுகளை அழிக்கிறத பற்றியம் அதை தடுத்து நிறுத்தி அதை ஒரு வழி பண்ணவேண்டிய அரசாங்கத்திற்கு இத விட முக்கியமான வேலை ஒன்று இருக்கு என்ன தெரியுமா? சொந்த குடும்பத்தோட வளர்ச்சியும், சொந்த குடும்பத்தோட சுயநலமும் தான். அந்த முக்கியமான வேலை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
இங்கு இருக்கும் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். அதற்கு தீர்வா காவிரி தண்ணீரை கொண்டு வரலாம் கொண்டு வந்தார்களா? இவ்வளவு கடல் சார்ந்த பாரம்பரிய ஊர்ல ஒரு அரசாங்க மெரின் கல்லூரி கொண்டு வரலாம் கொண்டு வந்தார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வேதாரயாணம் பகுதியில் உப்பு ஏற்றுமதிக்கு வசதியா செய்து கொடுத்தாங்களா? நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கிற மருத்துவர் இல்லையாம்? நாகப்பட்டினம் புது பேருந்து நிலையையத்தையாவது சுத்தமா சுகாதாரமாக வச்சி இருக்காங்களா? அல்லது நாகபட்டினர் ரயில்வே ஸ்டேஷன் வேலையாவது சீக்கிரமா முடித்து வைத்திருக்கலாம் அதையாவது செய்தார்களா? இங்கு ஏற்கனவே இருந்த ஸ்டீல் ரோலில் மில்லையும், ரயில்பெட்டி தயாரிக்கிற தொழிற்சாலையையும் மூடிட்டாங்க அதை மறுபடியும் திறந்தா நிறைய பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் ஏன் அதை பற்றி ஜோசிக்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.
அதே நேரத்தில் பெரம்பலூர் பகுதி மக்களுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். சீக்கிரமாக உங்களை தேடி நான் வருவேன். சுற்றுப்பயணம் போட்ட பிறகு, சனிக்கிழமை என்று பேசினார்கள். உங்கள் எல்லோரையும் நான் வந்து பார்க்கும் போது எந்த பிரச்சினையும் இருந்து விடக்கூடாது என்பதற்காக, சனிக்கிழமை பிரசாரம். முக்கியமாக உங்களது வேலைக்கு எந்த பிரசிச்னை வந்து விடக்கூடாது. ஓய்வு நாட்களில் வர வேண்டும் என்பது தான் எண்ணம். அரசியலில் சிலருக்கு நாம் ஓய்வும் கொடுக்க வேண்டும் இல்லையா..?
பிரசாரத்துக்கு எத்தனை இடையூறுகள்..? அஞ்சு நிமிஷம் தான் பேசணும்; பத்து நிமிஷம் தான் பேசணும் என்று. நான் பேசுவதே 03 நிமிடம். அதில் அதனை பேசக் கூடாது என்றால் நான் எதை தான் பேசுவேன்..? பிரதமர் வந்தால் இத்தனை கட்டுப்பாடுகள் இருக்குமா..? பிரசாரம் சென்றால் மின்தடை செய்கின்றனர். ஸ்பீக்கர் வயரைக் கட் பண்ணுறாங்க, மக்களைப் பார்த்து சிரிக்கக்கூடாது, மக்களைப் பார்த்து கையசைக்கக்கூடாது எனக் கட்டுப்பாடுகள்: எங்களுக்கு மட்டும் அதிகக் கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள். செம்ம காமெடியாக இருக்கிறது.

நேரடியாகவே கேட்கிறேன் சிஎம் சார், மிரட்டி பார்க்கிறீர்களா..? முதல்வர் அவர்களே,என்ன செய்து விடுவீர்கள்..? குடும்பத்தை வைத்து கொள்ளை அடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமாக உழைத்து சம்பாதித்த எனக்கு எவ்வளவு இருக்கும்..? நான் தனி ஆள் இல்லை, மாபெரும் மக்கள் சக்தியின் பிரதிநிதி. பெண்கள் சக்தியின் பிரதிநிதி சார்.
2026-இல் இரண்டே பேருக்கு இடையில் தான் போட்டி. ஒன்று திமுக. மற்றொன்று தவெக. பூச்சாண்டி வேலை வேண்டாம். நேர்மையாக தேர்தலை சந்திக்க வாருங்கள். பார்த்துவிடலாம். கொள்கையை பேருக்கு மட்டும் வைத்து விட்டு குடும்பத்தை வைத்து தமிழகத்தை கொள்ளையடிக்கும் நீங்களா..? தமிழகத்தின் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் ஒருத்தனாக இருக்கிற நானா..? பார்த்துவிடலாம். மீண்டும் தடைகள் போட்டால் மக்கள் அனுமதி பெற்று பிரசாரத்திற்கு வருவேன். சிஎம் சார்.
நமக்கு தடையாக போடும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா.? உங்கள் நல்லதுக்காக தவெக ஆட்சி அமைய வேண்டுமா..? இந்த போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம் கூட தூங்க விடாது. மன உறுதியுடன் இருங்கள். நல்லதே நடக்கும் என்று பேசியுள்ளார்.


