தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள நான்காவது படம் ‘இட்லி கடை’, அவர் நடித்த 52வது திரைப்படமாகும்.
ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது .அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கதாபாத்திர அறிமுக போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில், ‘இட்லி கடை’ இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் விரைவில் ‘வடசென்னை 2’ உருவாகும் என அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புடன், ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பெரும் உற்சாகம் நிலவுகிறது. ஏற்கனவே ‘வடசென்னை’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனுஷின் முக்கிய படைப்பாக பாராட்டப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக வெளிவரவிருக்கும் ‘வடசென்னை 2’ குறித்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


