Tuesday, March 10, 2026
spot_img
HomeUncategorizedவந்தே மாதரம் பாடலுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

வந்தே மாதரம் பாடலுக்கான புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.

இந்தியாவின் ஆன்மாவாகக் கருதப்படும் ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் (Ministry of Home Affairs) வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.

பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களால் இயற்றப்பட்ட இந்த மூலப் பாடலின் அனைத்து ஆறு சரணங்களும் இனி அனைத்து அரசு விழாக்களிலும், பள்ளிகளிலும் பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

150-வது ஆண்டு கொண்டாட்டம்: மாற்றத்திற்கான பின்னணி

வந்தே மாதரம் பாடல் உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதைக் கொண்டாடும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த 2026, பிப்ரவரி 6-ஆம் தேதியிட்ட உள்துறை அமைச்சகத்தின் உத்தரவுப்படி, இந்தப் பாடலின் ‘அதிகாரப்பூர்வ பதிப்பு’ (Official Version) இனி ஆறு சரணங்களையும் உள்ளடக்கியதாக இருக்கும்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் ஆட்சிக் காலத்தில், பாடலின் ‘மதச்சார்பற்ற’ (Secular) தன்மையைப் பேணுவதற்காக கடைசி நான்கு சரணங்கள் நீக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தற்போது அந்தத் தடைகள் தகர்க்கப்பட்டுள்ளன.

3 நிமிடம் 10 வினாடிகள்: புதிய நெறிமுறைகள்

இந்தப் பாடலை இசைப்பதற்கும் பாடுவதற்கும் கால அவகாசத்தை மத்திய அரசு துல்லியமாக நிர்ணயித்துள்ளது.

  • கால அளவு: முழுப் பாடலும் 3 நிமிடங்கள் 10 வினாடிகள் வரை ஒலிக்க வேண்டும்.

  • மரியாதை: தேசியப் பாடல் இசைக்கப்படும்போது சபையில் உள்ள அனைவரும் எழுந்து நின்று (Attention Pose) மரியாதை செலுத்த வேண்டும்.

  • விதிவிலக்கு: திரையரங்குகளில் படம் ஓடும்போதோ அல்லது செய்திச் சுருள்களின் போதோ பாடல் ஒலிபரப்பப்பட்டால், எழுந்து நிற்கத் தேவையில்லை. இது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதையும், அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பதையும் தவிர்க்க எடுக்கப்பட்ட முடிவாகும்.

எப்போதெல்லாம் பாட வேண்டும்? (Official Protocols)

தேசியக் கொடி அணிவகுப்பிற்கு கொண்டு வரப்படும்போது இந்தப் பாடல் இசைக்கப்படும். மேலும் கீழ்க்கண்ட நிகழ்வுகளில் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது:

  • குடியரசுத் தலைவர் பங்கேற்பு: குடியரசுத் தலைவர் பங்கேற்கும் அனைத்து சிவில் விருது வழங்கும் விழாக்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அரசு நிகழ்வுகளில் அவர் வருகையின் போதும், விடைபெறும் போதும் பாடல் இசைக்கப்படும்.

  • ஊடகங்கள்: ஆகாஷ்வாணி (Akashwani) மற்றும் தூர்தர்ஷன் வாயிலாக குடியரசுத் தலைவர் நாட்டு மக்களிடம் உரையாற்றுவதற்கு முன்னும் பின்னும் வந்தே மாதரம் ஒலிக்க வேண்டும்.

  • மாநில நிகழ்வுகள்: மாநில ஆளுநர்கள் அல்லது துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்கும் அதிகாரப்பூர்வ விழாக்களில் இது இசைக்கப்படும்.

பள்ளிகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள்

மத்திய அரசின் புதிய வழிகாட்டுதலின்படி, நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் (Morning Assembly) மாணவர்கள் குழுவாகச் சேர்ந்து வந்தே மாதரம் பாடுவது இனி கட்டாயமாக்கப்படுகிறது.

இது தவிர, அமைச்சர்கள் கலந்து கொள்ளும் முறைசாரா நிகழ்வுகளிலும் இப்பாடலை குழுவாகப் பாடலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இசை மற்றும் அணிவகுப்பு முறைகள்

இராணுவ அல்லது பேண்ட் (Band) இசையுடன் பாடல் பாடப்படும்போது சில குறிப்பிட்ட வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்:

  • பாடல் தொடங்குவதற்கு முன்னால் மியூசிக் ட்ரம் (Drumroll) அல்லது மிருதங்கம், ட்ரம்பெட் போன்ற கருவிகள் இசைக்கப்பட வேண்டும்.

  • அணிவகுப்புப் பயிற்சிகளின் (Marching Drill) போது, ஏழு படிகள் (Seven Steps) நடந்த பின்னரே பாடல் தொடங்கப்பட வேண்டும்.

தேசிய உணர்வை மேம்படுத்தவும், பாடலின் முழுமையான வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments