Wednesday, March 11, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ரஷ்யாவின் இரண்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ரஷ்யாவின் இரண்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

யுக்ரைனில் ஒரு சமாதான ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடத்த மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக, ரஷ்யாவின் இரண்டு பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் மீது, அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.

தான் புடினுடன் பேசும் ஒவ்வொரு முறையும், சிறந்த உரையாடல்களே நடத்தப்படுகின்றன.

எனினும், புடின் அடுத்த கட்டத்துக்கு நகர மறுப்பதாக, ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஹங்கேரியின் புடாபெஸ்டில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு, காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் என்று ட்ரம்ப் கூறிய மறு நாளே இந்தத் தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, ரஷ்யா நேற்று யுக்ரைன் மீது கடுமையான குண்டு வீச்சை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில், அர்த்தமற்ற இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர புடின் மறுத்ததால்” புதிய தடைகள் தேவை என்று அமெரிக்க திறைசேரியின் செயலாளர் ஸ்கொட் பெசென்ட் கூறியுள்ளார்.

தடை செய்யப்படும் எண்ணெய் நிறுவனங்கள் கிரெம்ளினின் “போர் இயந்திரத்திற்கு” நிதியளிப்பதாகவும் அவர் கூறினார்.

“கொலைகளை நிறுத்தும் வகையில் உடனடி போர் நிறுத்தத்திற்கான நேரம் இது” என்றும் பெசென்ட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தத் தடைகள் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்த உதவும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments