Friday, March 13, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்பாண்டிராஜ் படத்தில் இணையும் ஜெயராம், ஊர்வசி

பாண்டிராஜ் படத்தில் இணையும் ஜெயராம், ஊர்வசி

மலையாள சினிமாவில் வித்தியாசமான நடிப்பின் மூலம் பிரபலமானவர்கள் ஜெயராம், ஊர்வசி. தமிழிலும் நிறைய படங்களில் நடித்துள்ளனர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜெயராம், ஊர்வசி இருவரும் இணைந்து புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இந்த படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘தலைவன் தலைவி’ உள்ளிட்ட படங்களை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். இதில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள இளம் நடிகையான அனஸ்வரா ராஜன் உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதன் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 10ம் தேதியன்று ஆரம்பமாகிறது. இப்படம் தமிழ், மலையாளம் என ஒரேநேரத்தில் இரு மொழிகளிலும் உருவாகிறது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments