Sunday, March 8, 2026
spot_img
Homeஉலக செய்திகள்சூப் பாத்திரத்தில் சிறுநீர் - பெற்றோருக்கு கோடி அபராதம்!

சூப் பாத்திரத்தில் சிறுநீர் – பெற்றோருக்கு கோடி அபராதம்!

சீனாவின் ஹாட்பாட் சங்கிலியான ஹாய்டிலோ ஓட்டலில் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டு இளைஞர்கள் தனி அறையில் உணவு உண்ணும்போது சூப் பாத்திரத்தில் சிறுநீர் கழித்தனர். அந்த வீடியோ ஆன்லைனில் வைரலாக பரவியது.

விசாரணையில், அவர்கள் குடிபோதையில் இருந்தனர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தால் 4,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

அதன்பிறகு, ஹாட்பாட் உணவகத்தின் நஷ்டத்தை ஈடு செய்ய ஷாங்காய் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் தீர்ப்பாக, இளைஞர்களின் பெற்றோர் உணவகத்திற்கு 2.71 கோடி ரூபாய் நஷ்ட் ஈடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இச்சம்பவம் உணவகத்துக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாகும் மற்றும் பெற்றோரின் பொறுப்பு மீதும் மக்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments