Tuesday, March 10, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்மலையக ரயில் சேவை பாதிப்பு - தண்டவாள புனரமைப்பு ரயில் தடம் புரள்வு1

மலையக ரயில் சேவை பாதிப்பு – தண்டவாள புனரமைப்பு ரயில் தடம் புரள்வு1

ஹட்டன் மற்றும் ரொசெல்ல ரயில் நிலையங்களுக்கு இடையிலான 105½ மைல் கல் அருகே (05) மலையக ரயில் பாதையை பழுதுபார்ப்பதற்காக ரயில் தண்டவாளங்களை ஏற்றிச் சென்ற கிரேன் கொண்ட புனரமைப்பு ரயில் தடம் புரண்டதால், மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

உலபனையிலிருந்து கொட்டகலைக்கு ரயில் தண்டவாளங்களை ஏற்றிச் செல்லும் தண்டவாள புனரமைப்பு ரயில் இயந்திரமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது.

புனரமைப்பு ரயில் குழுவினர் குறித்த ரயில் இயந்திரத்தை சீர் செய்யும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

தடம் புரண்ட தண்டவாள புனரமைப்பு ரயில் இயந்திரம் சீர் செய்யும் வரை, பதுளையிலிருந்து கொழும்புக்கு செல்லும் ரயில்கள் ஹட்டன் ரயில் நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்படும் என்றும், கொழும்பிலிருந்து பதுளைக்கு செல்லும் ரயில்கள் ரொசெல்லவில் இருந்து திருப்பி அனுப்பப்படும் என்றும் ஹட்டன் ரயில் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments