Tuesday, March 17, 2026
spot_img
Homeகனடா செய்திகள்நோர்த் யோர்க் பகுதியில் விபத்து;இருவர் கைது

நோர்த் யோர்க் பகுதியில் விபத்து;இருவர் கைது

ரொரன்ரோவின் நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றை அடுத்து, அவ்விடத்திலிருந்து தப்பி ஓடிய இரண்டு நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரவு சுமார் 9:24 மணியளவில், வெஸ்டன் வீதி மற்றும் பென்மார் டிரைவ் சந்திப்புக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில், ஒரேயொரு வாகனம் மாத்திரம் சம்பந்தப்பட்டுள்ளதுடன், அது ஒரு வேலியுடன் மோதி கவிழ்ந்துள்ளது.

விபத்தை அடுத்து, வாகனத்தில் இருந்த இரண்டு ஆண் நபர்களும் கால்நடையாக அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். எனினும், சம்பவம் நிகழ்ந்து சிறிது நேரத்திலேயே அவர்கள் இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு சிறிய காயங்கள் மாத்திரமே ஏற்பட்டிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments