Tuesday, March 17, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இருபதுக்கு 20 முத்தரப்பு கிரிக்கெட் இன்று ஆரம்பம்

இருபதுக்கு 20 முத்தரப்பு கிரிக்கெட் இன்று ஆரம்பம்

பாகிஸ்தான், ஸிம்பாப்வே, மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் இன்று ஆரம்பமாகிறது.

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள குறித்த தொடரின் முதல் போட்டி இன்று மாலை 6.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஸிம்பாப்வே ஆகிய அணிகள் மோதவுள்ளன.
அத்துடன், தொடர் அட்டவணைப்படி, இன்றும் எதிர்வரும் 23 ஆம் திகதியும் நடைபெறவுள்ள போட்டிகளில் பாகிஸ்தான் மற்றும் ஸிம்பாப்வே ஆகிய அணிகள் மோதவுள்ளன.

அதேநேரம், 20 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் இலங்கை மற்றும் ஸிம்பாப்வே ஆகிய அணிகள் மோதவுள்ளதுடன், 22 ஆம் மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments