Sunday, March 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்புகையில் மூழ்கிய ரெயில் – அதிர்ச்சியில் பயணிகள்!

புகையில் மூழ்கிய ரெயில் – அதிர்ச்சியில் பயணிகள்!

மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் மும்பை சென்ட்ரல்–வல்சாத் பயணிகள் ரெயிலின் இன்ஜினில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

100க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற இந்த ரெயில், இன்று மாலை மும்பையில் இருந்து புறப்பட்டு வந்தது. மாலை 7.56 மணியளவில் கெல்வே ரோடு ரெயில் நிலையத்தை அடைந்தபோது, மின்சார இன்ஜினில் தீப்பிடித்து புகை எழுந்தது.

உடனடியாக ரெயிலில் இருந்த அனைத்து பயணிகளும் அவசர நடவடிக்கையாக பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாதுகாப்பு நடவடிக்கையாக, அந்த பகுதியில் ரெயில் பாதைக்கு மின்சார விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. ரெயில்வே தொழில்நுட்ப குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த விபத்தால் அப்பகுதியில் பிற ரெயில்கள் இயங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments