வலஸ்முல்ல – ரதனியாரா பகுதியில் மோட்டார் சைக்கிளில் கட்டுத்துப்பாக்கியுடன் சென்ற ஒருவர், அந்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் உயிரிழந்தார்.
இறந்தவர் வயது 32 ஆகும். மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மேலும், அவர் கட்டுத்துப்பாக்கியுடன் சட்டவிரோத மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பீப்பாயையும் தனது மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்றதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் வலஸ்முல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


