வியட்நாமில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் பேருந்து மீது கற்பாறைகள் வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 19 பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
32 பயணிகளுடன் சென்ற பேருந்து மீது பாறைகள் வீழ்ந்ததால் பேருந்தின் முன்பகுதி நசுங்கியதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து தடைப்பட்டதால், பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கத் தாமதமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


