Sunday, March 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்புலி பிரச்சினை தீவிரம் – கூண்டில் சிக்கிய அதிகாரிகள்!

புலி பிரச்சினை தீவிரம் – கூண்டில் சிக்கிய அதிகாரிகள்!

கர்நாடக மாநிலம் சாமராஜநகர் மாவட்டத்தில், புலி அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்த கிராம மக்கள், நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டில் வனத்துறை அதிகாரிகளை புலி பிடிக்கும் கூண்டில் அடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவசாய நிலங்களில் புலிகள் நடமாட்டம் அதிகரித்து, கால்நடைகள் தாக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். ஆனால் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காமல், பெயரளவுக்கு மட்டுமே கூண்டு வைத்துவிட்டதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து ஆய்வுக்கு வந்த பத்து பேர் கொண்ட வனத்துறை குழுவை, முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறி, கிராம மக்கள் கூண்டில் அடைத்தனர்.

பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், வனத்துறை அதிகாரிகளை மீட்டனர்.

வனப்பகுதியில் கடினமான சூழலில் பணிபுரியும் அதிகாரிகள் மீதான இந்தச் செயல், அவர்களின் மன உறுதியையும் பணி சூழலையும் பாதிக்கும் நடவடிக்கையாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments