Sunday, March 8, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்மீண்டும் இணைந்த பிச்சைக்காரன் ஜோடி!

மீண்டும் இணைந்த பிச்சைக்காரன் ஜோடி!

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான விஜய் ஆண்டனி, நடிகராக ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார்.

இயக்குநர் சசி இயக்கிய அந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அதன் பின்னர் விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்தாலும், சசியுடன் மீண்டும் இணையவில்லை. இதனால் இருவரின் கூட்டணி மீண்டும் உருவாகுமா என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், விஜய் ஆண்டனியும் இயக்குநர் சசியும் மீண்டும் இணைந்துள்ளனர். அவர்களின் புதிய படத்திற்கு ‘நூறு சாமி’ என பெயரிடப்பட்டுள்ளது.

விஜய் ஆண்டனி நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் அடுத்தாண்டு மே 1 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தலைப்புக்கு ஏற்ப கதை வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments