Tuesday, March 10, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்"தி ஹிட்மேன்" ரிக்கி ஹாட்டன் மறைவு!

“தி ஹிட்மேன்” ரிக்கி ஹாட்டன் மறைவு!

வடக்கு இங்கிலாந்தின் Hyde பகுதியில் உள்ள வீட்டில் அவர் உயிரிழந்த நிலையில் போலீசார் கண்டுபிடித்தனர். மரணம் சந்தேகத்திற்கிடமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“The Hitman” என அழைக்கப்பட்ட ஹாட்டன், தனது 15 ஆண்டுகால வாழ்க்கையில் WBA, IBO, IBF Light-Welterweight மற்றும் WBA Welterweight பட்டங்களை வென்றார். மொத்தம் 48 போட்டிகளில் 45 வெற்றிகளை பெற்றுள்ளார்.

ஓய்வுக்குப் பின் மன அழுத்தம், மதுபானம், போதைப்பொருள் பிரச்சினைகளால் அவதிப்பட்ட ஹாட்டன், பல முறை தற்கொலை முயன்றதாக வெளிப்படையாக கூறியிருந்தார். 2023-இல் Campaign Against Living Miserably என்ற மனநல தொண்டு அமைப்பின் தூதராக நியமிக்கப்பட்டார்.

மறைவுக்கு Manny Pacquiao, Amir Khan உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments