ஆசியக் கிண்ணத்தின் இன்றைய (15) இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் ஹொங்கொங் அணிகள் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைத் தேர்வு செய்தது.
இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஹொங்கொங் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் குவித்தது.
இதனால் இலங்கை அணி வெற்றியடைய 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


