மாரவில முதுகட்டுவ கடற்கரையில் சடலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து, மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அச்சடலத்தில் தலை, கைகள், கால்கள் எதுவும் இல்லாமல், உடலின் ஒரு பகுதி மட்டுமே இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீல நிற காற்சட்டையுடன் இருந்த அந்த சடலம், கரையோர மக்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


