Monday, March 9, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

ஏர்போர்ட் மூர்த்தி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது!

புரட்சி தமிழகம் கட்சித் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

இதனைத் தொடர்ந்து, சென்னை கடற்கரை சாலையில் உள்ள டி.ஜி.பி. அலுவலகம் அருகே ஏர்போர்ட் மூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் விசிகவினர் ஏர்போர்ட் மூர்த்தி மீது தாக்குதலில் ஈடுபட்டதாகவும், பதிலுக்கு மூர்த்தியும் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஏர்போர்ட் மூர்த்தி பாக்கெட் கத்தியால் விசிக கட்சியினரை குத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மெரினா போலீசார் ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், புழல் சிறையில் உள்ள ஏர்போர்ட் மூர்த்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சென்னை போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments