தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2001 முதல் 2006 வரை பிரதமராக இருந்த தக்சின், அதிகார துஷ்பிரயோகம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக 2009ஆம் ஆண்டு மொண்டெனேகுரோவுக்கு தப்பிச் சென்றார். சுமார் 15 ஆண்டுகள் புலம்பெயர்ந்து இருந்த அவர், 2023இல் நாடு திரும்பியபோது, 8 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர், தாய்லாந்து மன்னர் அந்த தண்டனையை 1 ஆண்டாகக் குறைத்தார்.
அவர் சில மணி நேரங்கள் மட்டுமே சிறைச்சாலையில் இருந்த நிலையில் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைப் பெற்றார். பின்னர் விசேட பிணையில் விடுதலையானார்.
ஆனால், சமீபத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவரது கட்சி தோல்வியடைந்த நிலையில், விசாரணையின் போது வைத்தியசாலையில் இருந்தபடி தண்டனையை அனுபவித்தது சிறைத்தண்டனையாக கருதப்படாது எனக் கூறி, புதியதாக ஒரு வருட தண்டனையை விதிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


