ஒன்றாரியோ மாகாணத்தில் கனடாவின் அலர்ட் ரெடி (Alert Ready) எனப்படும் தேசிய அவசர எச்சரிக்கை அமைப்பின் வருடாந்த சோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அமைப்புகள் மட்டுமே இந்த எச்சரிக்கைகளை வெளியிட முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக மனிதர்களின் உயிருக்கு அபாயம் ஏற்பட்டால் மட்டுமே இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்படுகின்றன.
அலர்ட் ரெடி (Alert Ready) இணையத்தளத்தின் தகவலின்படி, இந்த ஆண்டில் ஒன்றாரியோவில் மொத்தம் 230 அவசர எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
அந்நாட்டு நேரப்படி இன்று மதியம் 12.55 அளவில் கையடக்க தொலைபேசிகளில் நினைவூட்டல் ஒலி எழுப்பப்படும் எனக் குறிப்பிடப்படுகிறது.


