Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

நமது நிருபர்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் நேற்று(1) கத்திக்குத்துக்கு இலக்காகி தவனேசன் எனும் 40 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ள சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் சற்றுமுன் மருதங்கேணி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும்,
கத்திக்குத்துக்கு இலக்கானவர் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஜெனிற்றாவின் கணவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கொலை செய்யப்பட்டவர் மருதங்கேணி பகுதிக்கு சென்றுகொண்டிருக்கும் போது வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றார்.

கத்தி குத்துக்கு இலக்கானவரை மருதங்கேணி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை மருதங்கேணி பொலிசார் கைது செய்துள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments