இலங்கை கிரிக்கெட் நிறுவகம் (SLC), இங்கிலாந்தின் முன்னாள் பயிற்சியாளர் டிம் பூனை மகளிர் கிரிக்கெட்டிற்கான உயர் செயல்திறன் மேம்பாட்டு ஆலோசகராக நியமித்துள்ளது.
நான்கு மாத காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள பூன், வரும் செப்டம்பர் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் மகளிர் உலகக் கோப்பைக்கான தயாரிப்பில் தேசிய மகளிர் அணியுடன் பணியாற்றவுள்ளார்.
உலகக் கோப்பைக்குப் பின்னர், தேசிய 19 வயதிற்குட்பட்ட மகளிர் அணி, மகளிர் ‘A’ அணி மற்றும் 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் அணியுடனும் அவர் இணைந்து பணியாற்றுவார்.
முன்னதாக, இங்கிலாந்து 19 வயதிற்குட்பட்ட அணியின் பயிற்சியாளராகவும், இவ்வருடம் இலங்கை தேசிய அணிகளுடன் தொழில்நுட்ப மற்றும் தந்திரப் பயிற்சிகளை வழங்கியவராகவும் பூன் பணியாற்றியுள்ளார்.


