Wednesday, March 11, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்9.77 வினாடிகளில் வேகச் சாதனை – ஒப்லிக் செவில்லேக்கு தங்கம்

9.77 வினாடிகளில் வேகச் சாதனை – ஒப்லிக் செவில்லேக்கு தங்கம்

டோக்கியோவில் நடைபெற்று வரும் 2025 உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் அமெரிக்கா மற்றும் ஜமைக்கா வீரர்கள் தங்கள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் அமெரிக்காவின் மெலிசா ஜெபர்சன் தங்கப்பதக்கத்தை வென்றார். அவர் 100 மீட்டர் ஓட்டத்தை வெறும் 10.61 வினாடிகளில் நிறைவு செய்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இதற்கிடையில், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் ஜமைக்காவின் ஒப்லிக் செவில்லே சாம்பியனாகத் திகழ்ந்தார். அவர் தனது ஓட்டத்தை 9.77 வினாடிகளில் முடித்து வெற்றி பெற்றார்.

டோக்கியோவில் நடக்கும் இந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி, உலகம் முழுவதும் உள்ள தடகள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments