அரசியலை மையமாகக் கொண்ட தனது அடுத்த படத்தை “Naan Thaan CM” என அறிவித்துள்ளார் நடிகர்-இயக்குநர் பார்த்திபன்.
இப்படத்தில் அவர் சிங்காரவேலன் என்ற கதாபாத்திரத்தில், முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடும் ஒருவராக நடிக்கிறார்.
படத்தின் முதல் லுக் போஸ்டரை வெளியிட்டிருந்த பார்த்திபன், அதனுடன் நகைச்சுவையான அரசியல் உரையையும் பகிர்ந்துள்ளார்:
“பெரியோர்களே, தாய்மார்களே, வாக்களப் பெருமக்களே! ஜனநாயக உரிமை யார் வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். நானும் நிற்கிறேன். என்னை உட்காரவைக்க வேண்டியது உங்கள் கடமை. நான் CM நாற்காலியில் அமர்ந்த பிறகு போடப் போகும் முதல் கையெழுத்து – எனக்குப் பிறகு அந்த சீட்டில் யாருமே அமரக்கூடாது என்பதே! போடுங்கம்மா ஓட்டு, Boat சின்னத்தைப் பாத்து! – C.M. சிங்காரவேலன் (சோத்துக் கட்சி).”
இப்படத்தின் கதை, திரைக்கதை மற்றும் இயக்கத்தை பார்த்திபனே மேற்கொள்கிறார். தயாரிப்பு பணிகளை அவரது Bioscope Film Framers நிறுவனம் செய்கிறது.
இந்த படம் அடுத்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், சமீபத்தில் தனுஷ் நடித்துள்ள “இட்லி கடை” திரைப்படத்திலும் பார்த்திபன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


