Sunday, March 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்மாணவர்களின் கண்கள் பசையால் ஒட்டப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

மாணவர்களின் கண்கள் பசையால் ஒட்டப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!

அசாம் மாநிலம் கந்தமாள் மாவட்டத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சாலகுடா பகுதியில் உள்ள சேவாஷ்ரம் பாடசாலை விடுதியில் 3, 4, 5 ஆம் வகுப்பு மாணவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது, சிலர் விளையாட்டாக 8 மாணவர்களின் கண்களில் இன்ஸ்டன்ட் பசை தேய்த்துள்ளனர்.

இதனால் அவர்கள் கண் இமைகள் ஒட்டிக் கொண்டு திறக்க முடியாத நிலையில் சிக்கினர். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட நிர்வாகம் விசாரணை ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில், அப்பாடசாலையின் தலைமை ஆசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்களை கண்டித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments