முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (12) உத்தரவிட்டது.
இந்த உத்தரவை கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம பிறப்பித்தார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை அவர் பரிசீலித்தார்.
மகாவலிக்கு சொந்தமான காணியில் அமைந்திருந்த தனது அரசியல் அலுவலகம் போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டதற்காக, சட்டவிரோதமாக ரூ.88.5 இலட்சம் இழப்பீடாக பெற்ற குற்றச்சாட்டில் சஷீந்திர ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.
பின்னர் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், அதனை மேலும் நீட்டிக்க நீதிமன்றம் இன்றைய உத்தரவை பிறப்பித்துள்ளது.


