நமது நிருபர்
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தாக் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட
தொண்டைமானாறு தெற்கு கிராமசேவையாளர் பிரிவு, கெருடாவில் வடக்கு கிராமசேவையாளர் பிரிவு, கெருடாவில் தெற்கு கிராமசேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த
தெரிவுசெய்யப்பட்ட 26 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூபா 150,000 பெறுமதியான சத்துணவுப் பொருட்கள் மாதாந்த உதவி திட்டமாக வழங்கிவைக்கப்பட்டதுடன்,
முல்லைத்தீவு முள்ளியவளை கேப்பாபிளவு மாதிரி கிராமம் கிராமசேவையாளர் பிரிவுகளான M/101, M/102/, M/104 சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 40 குடும்பங்களுக்கு ரூபா 200,000 பெறுமதியான அத்தியவசியமான பொருள்களும் நேற்று புதன்கிழமை வழங்கிவைக்கப்பட்டதுடன் ரூபா 1000 பணமும் வழங்கிவைக்கப்பட்டது.
குறித்த உதவிகளை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் செ.மோகனதாஸ் சுவாமிகள் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று வழங்கி வைத்தார்.





