Monday, March 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சம்பத் மனம்பேரியின் கார் மீட்பு!

சம்பத் மனம்பேரியின் கார் மீட்பு!

பியல் மனம்பேரியின் சகோதரர் சம்பத் மனம்பேரிக்கு சொந்தமானதாகக் கூறப்படும் கார் ஒன்று நேற்று (09) எம்பிலிப்பிட்டி பொலிஸாரால் மீட்கப்பட்டது.

புதிய நகரில் உள்ள வாகனப் பழுதுபார்க்கும் நிலையத்தில் இருந்து கார் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலைய உரிமையாளர் அளித்த தகவலின்படி, சில நாட்களுக்கு முன் ஒருவர் காரை அங்கு கொண்டு வந்து, சம்பத் மனம்பேரியிடம் ஒப்படைக்குமாறு கூறி சென்றதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் போதைப்பொருள் (ஐஸ்) தயாரிப்பு மூலப்பொருட்களை மறைத்தது தொடர்பில் சம்பத் மனம்பேரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அவரின் கட்சி உறுப்புரிமையை நீக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments