Tuesday, March 10, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்நாசவேலை சதி வழக்கு! - நீதிமன்றத்தில் ஆஜராகாத பாகிஸ்தான் உளவாளி!

நாசவேலை சதி வழக்கு! – நீதிமன்றத்தில் ஆஜராகாத பாகிஸ்தான் உளவாளி!

நாசவேலைக்கு சதி திட்டம் தீட்டிய வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த இலங்கை தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக் 15ஆம் திகதி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

51 வயதான அமீர் சுபைர் சித்திக், 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நாசவேலைக்கு சதி திட்டங்களை தீட்டி பாகிஸ்தான் உளவாளிகளை நியமித்து செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை (NIA) வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

சென்னை பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, செப் 15ஆம் திகதி காலை 10:30 மணிக்கு நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. ஆனால் அமீர் சுபைர் சித்திக் பாகிஸ்தானில் பதுங்கியதாக தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments