Sunday, March 15, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

நகைச்சுவை பிரபலமான ரோபோ சங்கர தனது 46ஆவது வயதில் இன்று காலமானார்.

ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்ற நிலையில் மயக்கமடைந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ரோபோ சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்தார்.

இவரது மறைவு குறித்து அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments