நல்லூர் பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் பெண் நாய்களுக்கான இலவச கருத்தடை சிகிச்சை முகாம் வரும் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
நாய்களால் ஏற்படும் விபத்துகள் மற்றும் தொற்று நோய்களைத் தடுக்க நாய்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தச் செயற்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது.
சமூக நலனுக்காக வீதிகளில் உள்ள கட்டாக்காலி பெண் நாய்களைப் பிடித்து முகாமிற்கு ஒப்படைக்கும் நபர்களுக்கு, ஒரு நாய்க்கு ரூ.600 சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பொதுமக்கள் தங்களால் வளர்க்கப்படும் பெண் நாய்களையும் முகாமிற்கு கொண்டு வந்து கருத்தடை சிகிச்சை பெறுமாறு பிரதேச சபை கேட்டுக் கொண்டுள்ளது.


