நமது நிருபர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கரணவாய் ராஜகுலேந்திரன் பிரிந்தன் கொலை சந்தேக நபர்கள் இருவருக்கும் எதிர்வரும் 1 ம் திகதி வரை போலீஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது.
கடந்த 19ஆம் திகதி அன்று அதிகாலையில் குறித்த கொலையுண்ட நபரான ராஜகுலேந்திரன் பிரிந்தனை வெளிநாட்டிலிருந்து பொதி ஒன்று வந்திருப்பாதாக தொலைபேசியில் தெரிவித்து அவரது வீட்டிலிருந்து வெளியே வரவைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் மட்டக்களப்பு அக்கரைப்பற்று பிரதேசத்தை சேர்நத இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர்கள் இருவரையும் இன்றைய தினம் பிற்பகல் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர்கள் இருவரிடமும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளவேண்டும் என்று நெல்லியடி பொலீசாரால் நீதிமன்றில் கோரிக்கய விடுத்திருந்த நிலையில் குறித்த இரண்டு சந்தேக நபர்களையும் நெல்லியடி போலீசாரின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய எதிர்வரும் 01 ஆம் வரை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


