வடமராட்சி நிருபர்
கட்டைக்காட்டில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்களில் நால்வர் சரணடைந்த நிலையில் இன்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் மருதங்கேணி பொலிசாரால் முற்படுத்தப்பட்ட நிலையில் நால்வரையும் எதிர்வரும் (14)வரை விளக்கமறியலில் வைத்து கிளிநொச்சி நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவது,
கடந்த வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி கட்டைக்காடு கிழக்கு பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது வன்முறை கும்பல் ஒன்று கொடூரமான தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்
இதன்போது வீட்டில் காணப்பட்ட வாகனம் உழவியந்திரம், வீட்டின் உடமைகள், சிசிடிவி ஆகிய பொருட்கள் பலத்த சேதமடைந்திருந்தன
சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டதன் பிரகாரம் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு மருதங்கேணி பொலிசார் பலமுறை முயற்சி செய்திருந்தார்கள்
குறித்த குற்றச்செயலில் தொடர்புடைய சந்தேக நபர்களை பொலீசார் நீண்ட நாட்களாக தேடி வந்த நிலையில்
குறித்த குற்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் நால்வர் நேற்று (6) மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் தமது வழக்கறிஞர் ஊடாக சரணடைந்தனர்
சரணடைந்தவர்களை இன்றைய (7)தினம் கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை நால்வரையும் எதிர்வரும் (14) வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் உத்தரவிட்டதோடு தலைமறைவாகி உள்ள ஏனைய குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிசாருக்கு உத்தரவிட்டார்.


