Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கீரி சம்பா இறக்குமதிக்கு பரிந்துரை!

கீரி சம்பா இறக்குமதிக்கு பரிந்துரை!

அரசாங்கம் சந்தையில் நிலவும் கீரி சம்பா பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இன்று (16) நடைபெற்ற ஊடக சந்திப்பில், கீரி சம்பா பற்றாக்குறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், விவசாயிகள் அறுவடைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைந்திருந்தாலும், கீரி சம்பா பயிரிடுதல் தற்போது 7% மட்டுமே உள்ளதால் உற்பத்தி குறைவாக உள்ளது என்று தெரிவித்தார். ஆனால், ஒட்டுமொத்த நெல் உற்பத்தியில் எந்தப் பற்றாக்குறையும் இல்லாதது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் கீரி சம்பாவை கையிருப்பில் வைத்திருக்கிறார்களா என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லாத நிலையில், 40,000 மெட்ரிக் டன் கீரி சம்பாவை இறக்குமதி செய்ய அனுமதி பெறப்பட்டுள்ளது. தேவையானால், அந்த தொகையை இறக்குமதி செய்ய முடியும் என அமைச்சர் கூறினார். இருப்பினும், இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments