Monday, March 9, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கூட்டு நடவடிக்கைக்குத் தயார் - ஐ.தே.க. அறிவிப்பு!

கூட்டு நடவடிக்கைக்குத் தயார் – ஐ.தே.க. அறிவிப்பு!

ஆரம்பக் கட்ட கலந்துரையாடல்களில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை முன்னெடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பிற எதிர்க்கட்சிகளுடன் தொடர்ந்து பணியாற்ற தீர்மானித்துள்ளது என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.

இதற்காக, எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயல்படும் வகையில் குழு அல்லது அதற்கு இணையான ஒரு பொறிமுறையை உருவாக்கும் திட்டத்தையும் அக்கட்சி வகுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட கட்சிகளுடன் பொதுவான பிரச்சினைகள் குறித்து நீண்டகாலமாக கலந்துரையாடல்கள் நடைபெற்று வந்துள்ளதாகவும், அவற்றில் உருவான இணக்கப்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படையாக செயல்படுத்துவோம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments