இந்தியா–பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 6வது லீக் போட்டி துபாயில் நடைபெற்றது.
இந்த ஆட்டத்தை நடிகர் ரவி மோகன் மற்றும் கெனீஷா ஆகியோர் நேரில் கண்டு களித்தனர். இதுகுறித்த புகைப்படத்தை ரவி மோகன் தனது Instagram Story-யில் பகிர்ந்துள்ளார்.
போட்டியில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியா சார்பில் குல்தீப் யாதவ், பும்ரா, அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக பந்துவீசினர்.
தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி, 15.5 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் மற்றும் அபிஷேக் சர்மா சிறப்பான பங்களிப்பை வழங்கினர்.


