நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், நேபாளத்தில் இளைஞர்கள் உட்பட இடம்பெறும் அனைத்து வகையான கொலைகளையும் கண்டிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், பாராளுமன்றத்தையும் நீதிமன்றத்தையும் எரித்தது நேபாள ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அவமரியாதை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், இறுதியில் அரசியலமைப்பு இல்லாத நேபாளம் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும், நாட்டில் அமைதியை நிலைநாட்டி அரசியலமைப்புத் தேர்தலை நடத்துவது நிர்வாகத்தை பொறுப்பேற்ற இராணுவத்தின் கடமையாகும் என்றும் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
புத்தர் பிறந்த நேபாளம் இலங்கைக்கு தனித்துவமான நாடு என்றும், இதுபோன்ற மிலேச்ச செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தர் போதித்த தர்மத்தை நேபாள அரசாங்கம் முன்மாதிரியாகக் கொண்டு செயல்படும் என நம்புவதாகவும் முன்னாள் ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


