பிரபல சமையல் நிபுணர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜ், பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் இரண்டாவது திருமணம் நடத்தியுள்ளனர். ஜாய் கிரிசில்டா தற்போது 8 மாத கர்ப்பிணி.
கடந்த மாதம், ஜாய் கிரிசில்டா ரங்கராஜ் தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக காவல் ஆணையரகத்தில் புகார் அளித்திருந்தார். இதையடுத்து சமூக வலைதளங்களில் ரங்கராஜை குற்றம் சாட்டி வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இதனைத் தொடர்ந்து, மாதம்பட்டி ரங்கராஜ் சார்பில் இயங்கும் மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ஜாய் கிரிசில்டாவிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மனுவில், ‘நிறுவன இயக்குநரான ரங்கராஜின் தனிப்பட்ட விவகாரங்களை ஊடகங்களில் வெளிப்படுத்தி, நிறுவன நற்பெயருக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டதால், ஜாய் கிரிசில்டாவிற்கு நிறுவனம் தொடர்பாக பேச்சு செய்ய தடை விதிக்க வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.
நீதிபதி செந்தில் குமார் முன்பு இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கறிஞர் மனுதாரர் தரப்பில் ஆஜராக, ஜாய் கிரிசில்டாவின் செயலால் கடந்த 15 நாட்களில் ரூ.12.5 கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ஜாய் கிரிசில்டா, ஓய்வுபெற்ற நீதிபதி முன்பு மத்தியஸ்த பேச்சுக்கு வர வேண்டும் எனக் கோரினார். ஜாய் கிரிசில்டா தரப்பு, ‘மாதம்பட்டி’ என குறிப்பிடாமல் வெறும் ‘ரங்கராஜ்’ என்று கூறினால் யாருக்கும் தெரியாது; ஆகையால் மனு சரியானது அல்ல’ என வாதிட்டது.
இதையடுத்து, நீதிபதி வழக்கை 24ஆம் திகதி ஒத்திவைத்து, ரூ15.5 கோடி இழப்பீடு தொடர்பான ஆதாரங்களை சமர்பிக்க உத்தரவிட்டார். இதோடு, ரங்கராஜ் தனிப்பட்ட முறையில் ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மற்றொரு வழக்கையும் தொடர்ந்துள்ளார்.
அந்த வழக்கிலும் சமூக வலைதள வீடியோக்களை நீக்கவும், அவதூறு கருத்துக்களை தெரிவிக்க தடை விதிக்கவும் கோரப்பட்டுள்ளது.


