திரை இசை உலகில் 50 ஆண்டுகளை கடந்த இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் சிறப்புப் பாராட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய இளையராஜா, ரஜினி மற்றும் மகேந்திரனுடன் நடந்த பழைய நிகழ்ச்சிகளை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக மேடையில் இருவரும் மது அருந்தியதைப் பற்றி உரையாடிய சம்பவம் இணையத்தில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
பலர் இதனை தேவையற்ற உரையாடல் என விமர்சித்து வருகின்றனர்.


