Monday, March 16, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்'சிறகடிக்க ஆசை' ராஜேஸ்வரி தற்கொலை!

‘சிறகடிக்க ஆசை’ ராஜேஸ்வரி தற்கொலை!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராஜேஸ்வரி.

தற்போது ஒளிப்பரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வந்த ராஜேஸ்வரி, சென்னை பிராட்வேயில் உள்ள வீட்டில் தன் கணவருடன் வசித்து வருகிறார்.

சமீபகாலமாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சைதாப்பேட்டையிலுள்ள தாய் வீட்டிற்கு ராஜேஸ்வரி சென்றுள்ளார்.

குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்தவர், தாயின் பிபி மாத்திரையை அதிகளவு உண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜேஸ்வரி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments