வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஆரம்பமாகி இடம்பெற்றுவருகின்றது
ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் கெளரவ ரஜுவன் எம்பி தலைமையில் காலை 9.30 மணியளவில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எம்பி கலந்து கொண்டார்.
ஊடகவியலாளர்களுக்கு குறித்த கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் யூட்டியூபர்களுக்கு அனுமதி வழங்கப்படாத போதும் ரஜீவன் எம்பியால் இரண்டு சிறுவர்கள் பிரத்தியேகமாக அழைத்துவரப்பட்டு காணொளி எடுக்க அனுமதிக்கப்பட்டார்கள்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்களால் முறைப்பாடளிக்கப்பட்ட போதும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் எம்பி விசேட விதமாக அனுமதித்துள்ளார்



