கொழும்பின் பல பகுதிகளில் மீண்டும் அடை மழை பெய்து வருகின்றது. சீரற்ற காலநிலையின் காரணமாக கடந்த சில தினங்களில் நாட்டில் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்தன.
இந்த நிலையில், கடந்த மூன்று தினங்களாக கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதியில் மழையற்ற காலநிலை நிலவி வந்தது.
எனினும், இன்று மாலை முதல் கொழும்பின் பல பாகங்களில் கடும் மழை பெய்து வருகின்றது.
இந்நிலையில் பலத்த மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று இரவு 11.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த மின்னல் தாக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சபரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்தப் பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் அபாயத்தைக் குறைக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


