இங்கிலாந்து தலைநகர் லண்டனில் புலம்பெயர்ந்தோர், அகதிகள் மற்றும் சட்டவிரோத குடியேறிகளுக்கு எதிராக பெரும் போராட்டம் நடைபெற்றது. லட்சக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். போராட்டத்தின் போது, இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆனால் இதே நேரத்தில், லண்டன் முழுவதும் உள்ள இந்திய உணவகங்கள், கடைகள் மற்றும் ஹோட்டல்களில் வியாபாரம் செழித்து களைகட்டியது. சில போராட்டக்காரர்கள் பிரபல இந்திய நட்சத்திர ஓட்டல்களில் உணவு உண்டதோடு, சாலையோர இந்திய கடைகளில் வெங்காய பஜ்ஜி, போண்டா போன்றவற்றை வாங்கிச் சுவைத்தனர்.
சுடச்சுட பஜ்ஜி விற்பனை அமோகமாக நடைபெற்ற காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அதில், இங்கிலாந்து தேசியக் கொடியை போர்த்திய இளைஞர்கள், பெண்கள் பஜ்ஜி வாங்கிச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
இதனை பார்த்த நெட்டிசன்கள், “இந்திய சுவையில்லாமல் அன்றும் இல்லை… இன்றும் இல்லை… என்றும் இல்லை” என்று கருத்து பதிவிட்டு, வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.


