Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலத்துக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலத்துக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டியவின் உடலத்துக்கு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இறுதி மரியாதை செலுத்தினார்.

வென்னப்புவ, லுனுவில பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற உலங்கு வானூர்தி விபத்தில் குரூப் கேப்டன் நிர்மல் சியம்பலாபிட்டிய உயிரிழந்தார்.

இன்று ரத்மலானையில் வைக்கப்பட்டுள்ள அவரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.

அத்துடன், விமானியின் மனைவி, பெற்றோர், சகோதர, சகோதரிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் அவர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் மார்ஷல் சம்பத் துயாக்கோந்தா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments