Sunday, March 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்குடத்தனை வடக்கில் பனை விதை நடுகை..!

குடத்தனை வடக்கில் பனை விதை நடுகை..!

நமது நிருபர்

வடக்கு மாகாண சபையால் பிரகடனப்படுத்தப்பட்ட மரம் நடுகை மாதத்தை முன்னிட்டு பனை விதை நடுகை இன்று யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை வடக்கு கிராமத்தில் சூழலியல் ஆர்வலர் சோதிலிங்கம் அவர்களின் ஏற்பாட்டில் குடத்தனை வடக்கு இளைஞர்களும் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதில் பிரதம விருந்தினராக வடமராட்சி கிழக்கு பிரதேச தலமை கிராம அலுவலர் செபமாலை தோமஸ்யூட் சிறப்பு விருந்தினராக குடத்தனை வடக்கிற்கு பொறுப்பான மருதங்கேணி போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டு பனைவிதைகளை நாட்டிவைத்தனர்.

இதேவேளை குறித்த சூழலியல் ஆர்வலர் கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக வீதியோரங்களில் மரங்ளை நாட்டி வைத்து வறட்சியான மற்றும் கோடைகாலங்களில் நீரை ஊற்றி பராமரித்து வருகின்றமையும் குறிப்பிட தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments