ஆசிய கிண்ணம் 2025இல் இன்று இந்தியா–பாகிஸ்தான் போட்டி நடைபெற இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் அணி இன்னும் மைதானத்திற்கு வரவில்லை.
இந்திய அணி கடந்த போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுப்பு தெரிவித்தது. இதனால், அன்றைய போட்டியில் நடுவராக இருந்த எண்டி பைகிரப்டை ஆசிய கிண்ணத்தில் இருந்து விலக்க வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அறிவிக்கப்பட்டது.
இதற்கான எவ்வித முடிவும் எட்டப்படாத நிலையில், பாகிஸ்தான் அணி தங்கியுள்ள விடுதியில் இருந்து வெளியேறி, இன்னும் மைதானத்தில் இல்லை. இதனால் நாணய சுழற்சியும் மற்றும் போட்டி தொடக்கம் ஒரு மணித்தியாலம் தாமதமானது.


