மகளிர் உலகக்கிண்ண கிரிக்கெட் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது.
இதில், இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று நடைபெறும் 9வது லீக் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா, பாகிஸ்தான் மோதுகின்றன.
இந்த ஆட்டத்திற்கான நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடி வரும் நிலையில் அந்த அணி சற்றுமுன் வரை 36 ஓவர்களில் 8 விக்கட் இழப்பிற்கு 123 ஓட்டங்களை பெற்றிருந்தது.


