Sunday, March 8, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இந்திய அணி மீது பாகிஸ்தான் நிர்வாகம் புகார்!

இந்திய அணி மீது பாகிஸ்தான் நிர்வாகம் புகார்!

துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை 2025 குரூப் ஏ போட்டியில், இந்திய அணி பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஆனால், போட்டி முடிவில் வழக்கமான கை குலுக்கலில் இந்திய வீரர்கள் பங்கேற்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை எதிர்த்து பாகிஸ்தான் அணியின் நிர்வாகி நவீத் அக்ரம் சீமா, “இந்திய அணியின் செயல் விளையாட்டு உணர்வுக்கு எதிரானது” என போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட்டிடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்தார்.

மேலும், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா ஆட்டத்திற்கு பிந்தைய பேட்டிக்கு வராமல் புறக்கணித்தார். கை குலுக்கல் சர்ச்சையே இதற்கு காரணம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தரப்பு குற்றச்சாட்டுப்படி, அவர்கள் இந்திய அணியின் டிரஸ்ஸிங் ரூமில் கை குலுக்க காத்திருந்தபோது, இந்திய நிர்வாகம் கதவை மூடிவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் வெற்றிக்கு பின், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாகவும், இந்த வெற்றியை இந்திய ராணுவ வீரர்களுக்கு அர்ப்பணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments